Home /News /entertainment /

தனுஷின் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர் நாளை வெளியாகிறது…

தனுஷின் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர் நாளை வெளியாகிறது…

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

2015-ல் தனுஷ் நடித்த மாரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதன்பின்னர் சில காரணங்களால் தனுஷும், அனிருத்தும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் - இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

    சினேகா - பிரசன்னா குடும்பம் அவ்வளவு அழகு!

    திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    இந்நிலையில் ட்ரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    கர்ணன் படத்திற்கு பின்னர் தனுஷின் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுவதால் அவரது ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    2015-ல் தனுஷ் நடித்த மாரி திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இதன்பின்னர் சில காரணங்களால் தனுஷும், அனிருத்தும் இணைந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    விலங்குகளுக்காக மீண்டும் நிர்வாண புகைப்படங்களை எடுங்கள்… ரன்வீர் சிங்கிற்கு பீட்டா அழைப்பு

    இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளனர். இதற்கேற்ற வகையில் படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்களுமே ரசிகர்களின் விருப்பத்தை பெற்றுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி