Home /News /entertainment /

ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்…

ரசிகர்களின் வரவேற்பை பெறும் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர்…

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ்

கர்ணன் படத்திற்கு பின்னர் திரைக்கு வரும் முதல் தனுஷ் படம் என்பதால் அவரது ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில், ரசிகர்களை இந்த ட்ரெய்லர் திருப்தி அடைய செய்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இன்று வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் பட ட்ரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லர் நன்றாக உள்ளதாக ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    டெலிவரி பாய் கேரக்டரில் தனுஷ் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருக்கு தாத்தாவாக இயக்குனர் பாரதிராஜா, தந்தை கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்கள். தோழியாக வரும் நடிகை நித்யா மேனன் கவனம் ஈர்க்கிறார்.

    2 நிமிடங்கள் 11 வினாடிகள் ஓடக் கூடியதாக ட்ரெய்லர் கட் செய்யப்பட்டுள்ளது. ட்ரெய்லர் வெளியான குறைந்த அதிக பார்வைகளை யூடியூபில் கடந்திருக்கிறது.



    ராஷி கன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்த படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.



    திருச்சிற்றம்பலம் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.





    7 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் – அனிருத் காம்போ இந்த படத்தில் இணைந்துள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18-ம்தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்ணன் படத்திற்கு பின்னர் திரைக்கு வரும் முதல் தனுஷ் படம் என்பதால் அவரது ரசிகர்கள் திருச்சிற்றம்பலம் படத்தை எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில், ரசிகர்களை இந்த ட்ரெய்லர் திருப்தி அடைய செய்திருக்கிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி