Home /News /entertainment /

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்…

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட்…

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக கேப்டன் மில்லர் படம் பீரியட் மூவியாக உருவாக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. படத்தின் ஷூட்டிங் எப்போது, எங்கு தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக கேப்டன் மில்லர் படம் பீரியட் மூவியாக உருவாக்கப்படுகிறது.

தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.



இந்நிலையில் அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ஹாலிவுட் படமான தி கிரேமேன் படத்தின் அடுத்த பாகத்திலும் தனுஷ் இடம்பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படம் வரும் 29-ஆம்தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி