மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோ தனுஷ்... வாழ்த்திய பா.ரஞ்சித்!

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மாரி செல்வராஜின் அடுத்த ஹீரோ தனுஷ்... வாழ்த்திய பா.ரஞ்சித்!
நடிகர் தனுஷ் | இயக்குனர் மாரி செல்வராஜ்
  • News18
  • Last Updated: November 15, 2018, 5:20 PM IST
  • Share this:
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கொண்டாடி தீர்த்தனர். மேலும், இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் யாருமே எதிர்பாராத வகையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டேன். அமர்க்களமாக இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட யதார்த்தமும் வாழ்க்கைமுறையும் நாம் அங்கே இருப்பது போல் உள்ளது.



மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். அவர் போன்ற திறமைசாலிகளுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.



இதற்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “மிக அற்புதமான செய்தி. அண்ணன் “கலைப்புலி” தாணு @theVcreations அவர்களின் அரவணைப்பில், தன் மிகச்சிறந்த நடிப்பில் சிறக்கும் தனுஷை இயக்கும் பொறுப்பை ஏற்ற தம்பி மாரி செல்வராஜுக்கு என் இதயம் கனிந்த அன்பும்! வாழ்த்துகளும், பெரும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

First published: November 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading