Home /News /entertainment /

தி க்ரே மேன் லண்டன் படப்பிடிப்பில் பங்கேற்ற தனுஷ்!

தி க்ரே மேன் லண்டன் படப்பிடிப்பில் பங்கேற்ற தனுஷ்!

தனுஷ்

தனுஷ்

இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு இந்த வருட ஆரம்பத்தில் யுஎஸ்ஸில் நடந்தது. கொரோனா இரண்டாம் அலையின் போது தனுஷ் அங்கு தான் இருந்தார்.

ஹாலிவுட் திரைப்படம் தி க்ரே மேனின் லண்டன் ஷெட்யூல்டில் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தனுஷ் ஏற்கனவே தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார். அவரது இரண்டாவது ஆங்கில திரைப்படம் தி க்ரே மேன். அவென்ஜர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ இந்தப் படத்தை இயக்கி வருகின்றனர். ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரயான் கோஸ்லிங், க்ரிஷ் ஈவனஸ் தனுஷுடன் நடிக்கின்றனர்.

இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு இந்த வருட ஆரம்பத்தில் யுஎஸ்ஸில் நடந்தது. கொரோனா இரண்டாம் அலையின் போது தனுஷ் அங்கு தான் இருந்தார். படப்பிடிப்பு முடிந்த பின்னும் கொரோனா காரணமாக அவர் யுஎஸ்ஸிலேயே சில வாரங்கள் இருக்கும்படியானது. இப்போது படத்தின் சில பேட்ச் வொர்க்குக்காக லண்டனில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார்.



தி க்ரே மேன் மிகுந்த பொருட் செலவில் தயாராகிறது. இந்தப் படம் திரையரங்கில் வெளியாகப் போவதில்லை. நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. அப்படி வெளியாகும் போது, சமீபத்தில் வெளியான ரெட் நோட்டீஸ் படத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாரான நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் திரைப்படமாக இது இருக்கும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி