• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனுஷின் ’அத்ரங்கி ரே’ இந்திப் படத்தின் தமிழ் பெயர் என்ன தெரியுமா?

தனுஷின் ’அத்ரங்கி ரே’ இந்திப் படத்தின் தமிழ் பெயர் என்ன தெரியுமா?

காட்சி படம்

காட்சி படம்

Dhanush Hindi Movie : தமிழில் வெளியாகும் தனுஷின் ஹிந்தி படம் ?

  • Share this:
தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் இந்திப் படம் அத்ரங்கி ரே. இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கை தனுஷ் பேசிமுடித்திருப்பதாகவும், படம் தமிழில் வெளியாவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் அத்ரங்கி ரே. உடன் சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான். டி சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் காட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

அத்ரங்கி ரே படத்தை 2021 பிப்ரவரி 14 வெளியிட திட்டமிட்டிருந்தனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியாததால் அந்த தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்த போது கொரோனா இரண்டாம் அலை உக்கிரம் பெற்றிருந்தது. பிறகு ஆகஸ்ட் 6 படம் வெளியாகும் என்றனர். அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லை.

also read :ஓடிடியில் நேரடியாக வெளியாகும் தனுஷின் 4வது திரைப்படம்?

இந்நிலையில், படம் ஓடிடியில் வெளியாகும் என்றார் படத்தில் நடித்திருந்த அக்ஷய் குமார். நெட்பிளிக்ஸ் அனேகமாக படத்தை வெளியிடலாம். தமிழில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் படத்தை தமிழில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் பதிப்புக்கு கலாட்டா கல்யாணம் என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக கேள்வி. 1968 இல் சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் கலாட்டா கல்யாணம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதே பெயரை இப்போது தனுஷ் படத்துக்கு தேர்வு செய்துள்ளனர்.

அத்ரங்கி ரே எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும், அதன் தமிழ்ப் பெயர் என்ன என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: