ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போண்டாமணிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிய தனுஷ்

போண்டாமணிக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிய தனுஷ்

தனுஷ் - போண்டா மணி

தனுஷ் - போண்டா மணி

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணிக்கு நடிகர் தனுஷ் நிதி உதவி வழங்கியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வரும் போண்டாமணி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  நடிகர் போண்டாமணி பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். போண்டாமணியின் இரண்டு சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருக்கு உதவும்படி போண்டாமணியின் நண்பரும் நடிகருமான பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வெளியாக்கி பலராலும் பகிரப்பட்டது. இந்த நிலையில் போண்டாமணியின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

  also read : மாலத்தீவில் என்ஜாய் செய்யும் அமலா பால் - லேட்டஸ்ட் போட்டோஸ்

  இதை தொடர்ந்து நடிகர் தனுஷ்,  போண்டாமணிக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்த நிதி தனக்கு கிடைத்ததாகவும், உதவி செய்ததற்கு நன்றியும் கூறி வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Actor dhanush