முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'நம்ம பக்கத்து ஸ்டேட்... இங்கிலீஸ் எதுக்கு... தமிழ்ல பேசுறேன்' - ஹைதராபாத்தில் அசத்தலாக பேசிய வாத்தி தனுஷ்!

'நம்ம பக்கத்து ஸ்டேட்... இங்கிலீஸ் எதுக்கு... தமிழ்ல பேசுறேன்' - ஹைதராபாத்தில் அசத்தலாக பேசிய வாத்தி தனுஷ்!

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

இங்கீஸ்ல எதுக்கு பேசணும் இது நம்ம பக்கத்ஹ்டு ஸேடேட், தமிழில் பேசுறேன் என வாத்தி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தெலுங்கு ரசிகர்களிடம் கெத்து காட்டிய நடிகர் தனுஷ்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கவனிக்கிறது.

சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி உள்ளது. கல்வி வணிக மயம் குறித்து இந்தப் படம் பேசியுள்ளதாக தெரிகிறது. அதை கதையின் நாயகன் எப்படி அணுகுகிறார் என்பதுதான் கதைக்களம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தெலுங்கில் ரசிகர்களுக்கு வணக்கத்தையும் பாராட்டையும் தெரிவித்த தனுஷ் எனக்கு தெலுங்கு அவ்வளவா பேச வராது புரியும். நீங்க என் பக்கத்து ஸ்டேட் தான இங்கிலீஸ்ல எதுக்கு பேசனும் தமிழ்ல பேசுறேன் புரியும்ல என்று கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

சிறிது நேரம் தமிழில் பேசிய பிறகு சிலர் புரியவில்லை என்று கூறியதால் பிறகு ஆங்கிலத்தில் தனுஷ் பேசத் தொடங்கினார். இறுதியாக தனுஷ் பேசி முடிக்கும் போது ரசிகர்கள் அவரை விஐபி படத்திலிருந்து அமுல் பேபி வசனத்தை பேச சொல்ல அதற்கு தமிழில் தான் வரும் என்று தனுஷ் அதனை பேசிக்காட்டினார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கைத்தட்டி கொண்டாடினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Dhanush