‘கொடி பறக்குதா’ அதிக ஃபாலோயர்கள் கொண்ட தமிழ் நடிகர்; சாதனை படைத்த தனுஷ்!

தனுஷ்

பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, தற்போதைய தமிழ் சினிமாவின் எதார்த்த நாயகனாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்.

  • Share this:
    சமூகவலைதளமான ட்விட்டரில் பத்து மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ள முதல் கோலிவுட் நடிகர் என்ற சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார் நடிகர் தனுஷ்.

    துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு அறிமுகமான நடிகர் தனுஷ். தனது ஒல்லியான உடல் அமைப்புக்காக வந்த பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, தற்போதைய தமிழ் சினிமாவின் எதார்த்த நாயகனாக மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், பிற மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ் தவிர்த்து இந்தி, ஆங்கிலம் மாதிரியான படங்களில் தனுஷ் நடித்துள்ளார். தற்போது, ’தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்படிப்புக்காக அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

    நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அண்மையில் ஜகமே தந்திரம் படம் வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. தொடர்ந்து நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் நடித்து வரும் ’அத்ரங்கி ரே’ என்ற படமும் இந்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also read: கெத்தா போட்டோ வெளியிட்ட நடிகை சினேகா; பயந்து நடுங்கிய வீடியோவை வெளியிட்ட பிரசன்னா!

    பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, இயக்கம், நடிப்பு என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்து வரும் தனுஷை தமிழகம் மட்டுமல்லாது பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். அதன் எதிரொலியே இந்த பத்து மில்லியன் ஃபாலோயர்களை அவர் பெற்றுள்ளார்.

    இதனால் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார். இதனை அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published: