மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதையடுத்து இத்திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்த படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கண்டா வரச் சொல்லுங்க, பண்டாரத்தி புராணம் உள்ளிட்ட இரண்டு பாடல்களை வெளியிட்டது.
இந்தப் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகும் என்று நடிகர் தனுஷ் இன்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கர்ணன்’ திரைப்படத்தை அடுத்து பாலிவுட்டில் அக்ஷய்குமாருடன் தனுஷ் நடித்திருக்கும் ‘அத்ரங்கி ரே’ திரைப்படம் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தற்போது அமெரிக்காவில் தி க்ரே மேன் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் தனுஷ்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.