Home /News /entertainment /

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

தனுஷ்

தனுஷ்

Dhaush Arun Madheswaran : சத்யஜோதி - தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த நான்காவது படத்தை முதலில் ராட்சசன் ராம்குமார் இயக்குவதாக இருந்தது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம்,  வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் அந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் தனுஷ் -  அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் அந்தப் படத்திற்கு கேப்டன் மில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். அதில் தனுசுடன் நடிகை பிரியங்கா மோகன்,  மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டவர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.





சத்யஜோதி - தனுஷ் கூட்டணியில் உருவாகும் இந்த  நான்காவது படத்தை முதலில் ராட்சசன் ராம்குமார் இயக்குவதாக இருந்தது. அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய எலன் இயக்க ஒப்பந்தமானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்கள் இருவரும் அந்தப் படத்தை இயக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்… ஆவலைத் தூண்டும் வீடியோ

இதைத்தொடர்ந்து ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் ஒப்பந்தமானார்.  அதற்கான அறிவிப்பைதான் இன்று பட குழுவின் வெளியிட்டுள்ளனர். கேப்டன்மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - விக்ரம் – பா. ரஞ்சித் படத்தின் புதிய தகவல்…. கேரக்டர் குறித்த சூப்பர் அப்டேட்

தனுஷ் நடிக்கும் படத்திற்கு கேப்டன் மில்லர் என தலைப்பை வைத்து இருக்கும் நிலையில் ஏற்கனவே ஆர்யா நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:

Tags: Actor dhanush

அடுத்த செய்தி