முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய நடிகர் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய நடிகர் தனுஷ்

படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ்

படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ்

மித்ரன் ஆர்.ஜவகர்  இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.  இந்த திரைப்படத்தில் தனுசுடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷின் நடிப்பில் வெளியான திருசிற்றம்பலம் திரைப்படம் தமிழகத்தில் 10 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கும் நிலையில் பட குழுவினர் வெற்றியை கொண்டாடியுள்ளனர். 

மித்ரன் ஆர்.ஜவகர்  இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.  இந்த திரைப்படத்தில் தனுசுடன் நித்யா மேனன், ராஷி கண்ணா, பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக முதல் ஐந்து நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது.  இதைத்தொடர்ந்து வார நாட்களிலும் ரசிகர்கள் வருகை வெகுவாக இருந்தது. இதன் காரணமாக முதல் வார முடிவில் 40 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் தாண்டியுள்ளது.

Also read... உட்கார நாற்காலி தரவில்லை - இயக்குனர் கௌதம் மேனன் மீது புகார் சொன்ன கமல்

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்ததை தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று கொண்டாடியுள்ளனர்.  இதற்கான விழா ஒரு பிரபல நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor dhanush, Entertainment