முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மைனஸ்-களை ப்ளஸ் ஆக்கி... பொல்லாதவனாய் பொளந்துகட்டும் அசுரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மைனஸ்-களை ப்ளஸ் ஆக்கி... பொல்லாதவனாய் பொளந்துகட்டும் அசுரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தனுஷ்

தனுஷ்

2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷை பார்த்த யாரும் இவர் தேசிய விருது வாங்குவார் என்றோ, ஹாலிவுட் வரை சென்று அசத்துவார் என்றோ சொல்லியிருந்தால்  நம்பியிருக்க மாட்டார்கள். மெலிந்த தேகம், ஹீரோவுக்கேற்ற பொலிவு, நடிப்பை வெளிப்படுத்த முடியாத கூச்ச சுபாவம் என பல விமர்சனங்கள் தனுஷை நோக்கி  முன்வைக்கப்பட்டன.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

உங்கள் தோற்றத்திற்காக உங்களை ஒருவர் கேலி செய்தால் அதை குறித்து கவலை கொள்ளாமல் உழையுங்கள் . உலகின் பெரிய நடிகர் உங்களை செக்ஸி தமிழ் பிரெண்ட் என அழைப்பார் என தனுஷ் பேசி இருந்தது பலருக்கும் தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஆரம்பத்தில் தோற்றத்திற்காக கிண்டல் செய்யப்பட்டு தற்போது க்ரேமேன் திரைபடத்தில் க்றிஸ் இவான்ஸ் செக்ஸி தமிழ் ப்ரெண்ட் என அழைக்கும் அளவு உயர்ந்துள்ள தனுஷின் 39-வது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய தொகுப்பு.

2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷை பார்த்த யாரும் இவர் தேசிய விருது வாங்குவார் என்றோ, ஹாலிவுட் வரை சென்று அசத்துவார் என்றோ சொல்லியிருந்தால்  நம்பியிருக்க மாட்டார்கள். மெலிந்த தேகம், ஹீரோவுக்கேற்ற பொலிவு, நடிப்பை வெளிப்படுத்த முடியாத கூச்ச சுபாவம் என பல விமர்சனங்கள் தனுஷை நோக்கி  முன்வைக்கப்பட்டன.

2003-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல்கொண்டேன் திரைப்படத்தில் அதே தோற்றத்துடன் தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. எனினும் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை தனுஷ் பிடிக்க முடியும் என எவரும் நம்பவில்லை. அடுத்தடுத்து வெளியான ட்ரீம்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் தான் தேசிய விருதை வெல்வேன் என அப்போதே சில நேர்காணல்களில்  உறுதியுடன் சொன்னார் நடிகர் தனுஷ்.

தேவதையை கண்டேன், திருடா திருடி, திருவிளையாடல் உள்ளிட்ட திரைப்படங்கள் தனுஷிற்கு வர்த்தகரீதியான வெற்றிகளை ஈட்டித் தந்தன. இந்த சமயத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் தனுஷின் ஆகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. புதுப்பேட்டை  திரைப்படம் வெளியானபோது  கிடைத்த ரசிகர்களை காட்டிலும், இன்றைய தேதியில் புதுப்பேட்டை திரைப்படத்திற்கு ரசிகர் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகவே தனுஷ் செல்வராகவன் மீண்டும் இணைந்துள்ள நானே வருவேன் திரைப்படம் புதுப்பேட்டை திரைப்படத்தின் தரத்தை மிஞ்சுமா  என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் கூட்டணி அமைத்த பொல்லாதவன் திரைப்படம் அவர்கள் இருவரின் வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. பொல்லாதவன் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தனது உடல் அமைப்பு குறித்து கேலி செய்த அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக சட்டையைக் கழற்றி சண்டைபோட்டு கெத்து காட்டியிருந்தார் தனுஷ்.

Also read... வெளியானது வாத்தி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்

இதன்பின்னர் வெற்றிமாறன் தனுஷ் கைகோர்த்த ஆடுகளம் திரைப்படம் தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தேசிய அளவிலான அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. இதற்கிடையில் மூனு திரைப்படத்திற்காக அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் யூடியூப் வலைதளம் பெரிய அளவில் அறிமுகமாகாத காலகட்டத்திலேயே உலகமெங்கும் ஹிட்டடித்து பல சாதனைகளையும் படைத்தது. இந்தியாவின் பெரும் பணக்காரரான டாட்டா விருந்துக்கு அழைத்தது,  ஜப்பான் பிரதமர் தனுஷ் பார்க்க அழைப்பு விடுத்தது என உலகமெங்கும் பிரபலம் அடைந்தார்.

இதன்பின்னர் 2013 ஆம் ஆண்டில் ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா தனுஷிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கியது. பின்னர் அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் திரைப்படத்தில் போட்டி போட்டு நடித்த தனுஷ் சிறந்த நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றார்.  பாலிவுட்டை சாத்தியப்படுத்திய கையோடு ஹாலிவுட்டில் ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் அண்மையில் வெளியாகியுள்ள க்ரே மேன் படத்தில் தமிழராக நடித்து இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ள தனுஷ், தன்னம்பிக்கையின் அடையாளம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush