ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் படக்குழு அறிவித்த நியூ அப்டேட்!

தனுஷ் ரசிகர்களுக்கு கேப்டன் மில்லர் படக்குழு அறிவித்த நியூ அப்டேட்!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் தொடங்க உள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடைபெற்றது. இதை  தொடர்ந்து சிறிய இடைவேளை எடுத்துக் கொண்ட பட குழு மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளது.  டிசம்பர் முதல் வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. அதில் நடிகர் தனுஷ் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

Also read... கனவோடு வந்தேன்... இங்க நானே என்ன அசிங்கப்படுத்திபேனோ? - பிக்பாஸ் வீட்டில் கதறி அழுகும் தனலட்சுமி!

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush