#HappyBirthdayDhanush | திறமையால் திரையுலகில் தனி இடம் பிடித்த தனுஷ்!

Actor Dhanush Birth Day | 2013-ம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தி நடிகராக பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதன் மாபெரும் வெற்றியின் மூலம் தேசமே கொண்டாடும் கலைஞனாக மாறினார்.

news18
Updated: July 28, 2019, 1:24 PM IST
#HappyBirthdayDhanush | திறமையால் திரையுலகில் தனி இடம் பிடித்த தனுஷ்!
தனுஷ்
news18
Updated: July 28, 2019, 1:24 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேசிய விருது பெற்ற கலைஞருமான தனுஷ் இன்று தனது 36-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். 

தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் கம்பீர உடற்கட்டும், வசீகர தோற்றமும் வேண்டும் எனும் தொன்றுதொட்ட மரபை தன் அசாதாரணமான நடிப்பால் மாற்றியமைத்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், முதல் படத்திலேயே வெற்றி நாயகனாக உருவெடுத்தார்.

முதல் படம் வெற்றி பெற்றாலும் தனுஷின் தோற்றத்தை வைத்து அவரை கேலி பேசியவர்கள் ஏராளம். அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை என நடிப்பில் மெருகேறிய தனுஷ், அதன் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.




ஆரம்ப காலத்தில் இருந்து தோற்றத்தை வைத்து தன்னை கேலி பேசியவர்களுக்கு 'பொல்லாதவன்' படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் கொடுத்த பதில், தமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ் பேக் நாயகனாக அவரை முன்னிறுத்தியது. இந்த கூட்டணி அடுத்து இணைந்த ஆடுகளம் படத்தில் மதுரை மைந்தனாக மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், அதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் கைப்பற்றினார்.



Loading...

இவர் எழுதி பாடிய ‘Why This Kolaveri’ பாடல் அவரை உலகம் முழுக்க பிரபலமாக்கியது. இணையத்தின் அசுர வளர்ச்சியை தமிழில் முதல்முறையாக அறுவடை செய்த பாடல் இதுதான். இதன்மூலம் தமிழ் தெரியாத முகங்களுக்கு கூட தனுஷ் பரிட்சயமானார். ரத்தன் டாட்டாவுடன் சந்திப்பு, மன்மோகன் சிங்குடன் விருந்து என ஒரே இரவில் இந்தியாவின் விஐபி ஆனார் தனுஷ்.

2013-ம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் ஹிந்தி நடிகராக பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதன் மாபெரும் வெற்றியின் மூலம் தேசமே கொண்டாடும் கலைஞனாக மாறினார்.



நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தொட்டதில் எல்லாம் சிக்ஸர் அடித்து ஒரு பன்முக கலைஞராக வலம் வரும் தனுஷ், கோலிவுட், பாலிவுட் என எல்லைகளைக் கடந்து இன்று ஹாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். இவர் நடித்த ஹாலிவுட் படமான ‘The Extraordinary Journey of the Fakir’  திரைப்படம் அண்மையில் ஹாலிவுட்டில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே தன்னை பின் தொடர்ந்து வரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் புறம்தள்ளிவிட்டு தனக்கான எல்லையை விரித்துக் கொண்டே செல்லும் தனுஷ், அதன் மூலம் ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தெறிந்து, திறமை உள்ள எல்லோருமே ஹீரோக்கள்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளார்.

வீடியோ பார்க்க: பாகுபலி படத்தின் கதை காப்பியா?

First published: July 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...