ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பள்ளிகளில் காதலிப்பது போன்ற காட்சிகளை சினிமாவில் தவிர்க்க வேண்டும் - நடிகர் தாமு

பள்ளிகளில் காதலிப்பது போன்ற காட்சிகளை சினிமாவில் தவிர்க்க வேண்டும் - நடிகர் தாமு

நடிகர் தாமு

நடிகர் தாமு

மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மது பழக்கத்திற்கு ஆளாகமாட்டார்கள். மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் ஸ்மோக்கிங், ட்ரிங்கிக் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்றும் நடிகர் தாமு தெரிவித்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.

    உலக உணவு தினத்தை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் திரைப்பட நடிகர் தாமு மற்றும் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி உணவுப்பொருட்களை வழங்கினர்.

    முன்னதாக பார்வையற்றோரிடம் உரையாற்றிய நடிகர் தாமு பார்வையற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மிமிக்ரி செய்து காட்டினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். போதை பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், சினிமாவை ஓடிடியில் பார்ப்பதை விட திரையங்கில் பார்த்து ரசிப்பது தான் சிறந்தது. எவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி வந்தாலும் அது திரையரங்குகளில் தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம் எனவும் தாமு தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் பாசிடிவ், நெகடிவ் இருக்கிறது. இளைஞர்கள் பாசிட்டாவானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சினிமாவில் போதை காட்சிகளில் மது அருந்தக்கூடாது என எழுத்து போடுவது ஏமாற்றுவேலை, இது பெரிய மனமாற்றத்தை தராது நான் திரைப்படம் இயக்கினால் போதை காட்சிகள் இல்லாமல் எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

    மேலும், திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை உருவக்கேலி செய்வது தடுக்க வேண்டும், யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது என்றும் தாமு தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய நடிகர் தாமு, கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது. பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது, நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Also read...  இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் தெரியுமா? போட்டியே இவங்க ரெண்டு பேருக்கும்தான் - வெளியானது ப்ரோமோ

    மேலும், மாணவர்கள் மீது சினிமாத்துறையினர் அக்கறை காட்ட வேண்டும். சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தவறான தாக்கம் ஏற்படும். எனவே இது போன்ற காட்சிகளை தவிர்க்கவேண்டும், சினிமா மூலம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றும் தாமு தெரிவித்தார்.

    தொடர்ந்து, மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மது பழக்கத்திற்கு ஆளாகமாட்டார்கள். மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் ஸ்மோக்கிங், ட்ரிங்கிக் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்றும் நடிகர் தாமு தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment