முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிடிச்ச மியூசிக் டைரக்டர்ஸ் இந்த 2 பேர்தான்… பிரபுதேவா பதிலால் ரசிகர்கள் ஆச்சர்யம்

பிடிச்ச மியூசிக் டைரக்டர்ஸ் இந்த 2 பேர்தான்… பிரபுதேவா பதிலால் ரசிகர்கள் ஆச்சர்யம்

நடிகர் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா

சினிமாவுக்கு வந்த புதிதில் இளையராஜாவின் இசையில் படங்களில் நடித்தும், பல்வேறு பாடல்களுக்கு நடன காட்சிகளையும் பிரபுதேவா வடிவமைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் பிரபுதேவா தனக்கு பிடித்தமான 2 இசையமைப்பாளர்களின் பெயர்களை கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் என பலர் இருக்க இருவரை மட்டுமே தனக்கு ஃபேவரைட்டாக குறிப்பிட்டுள்ளார் நடனப்புயல்.

ஹிட், ஃப்ளாப் எதுவானாலும் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் பிரபுதேவா. இந்தியன் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று பிரபுதேவாவை ரசிகர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

விஜய், சல்மான் கான்,ஜெயம் ரவி உள்ளிட்டோரை வைத்து படத்தை இயக்கியும் அதில் பிரபுதேவா வெற்றியும் பெற்றுள்ளார்.

இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகும் நட்சத்திர சினிமா ஜோடி… ரசிகர்கள் உற்சாகம்

இந்நிலையில், பிரபுதேவாவின் வித்தியாசமான நடிப்பில் மை டியர் பூதம் என்ற படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குழந்தைகளைக் கவரும் பூதம் வேடத்தில் பிரபுதேவா சூப்பராக நடித்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிடித்த இசையமைப்பாளர்கள் யார் என்ற கேள்விக்கு பிரபுதேவா, ‘இளையராஜா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்’ என்று பதில் அளித்துள்ளார். அவரது இந்த பதில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இந்த வீடியோவை தேவி ஸ்ரீ பிரசாத் பதிவிட்டு, நன்றி தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த புதிதில் இளையராஜாவின் இசையில் படங்களில் நடித்தும், பல்வேறு பாடல்களுக்கு நடன காட்சிகளையும் பிரபுதேவா வடிவமைத்துள்ளார்.

ஷாரூக்கான் பட ஷூட்டிங்கிலிருந்து லீக்கான ஃபோட்டோ… அதிர்ச்சியில் படக்குழு

அவரது இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பி விஜய் நடித்த வில்லு திரைப்படம் கடந்த 2009 பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

First published:

Tags: Prabhu deva