மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாஸ்டர் பட பாடலுக்கு செய்த டிக்டாக் வீடியோ

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் தமிழ் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாஸ்டர் பட பாடலுக்கு செய்த டிக்டாக் வீடியோ
நடிகர் சிரஞ்சீவி சார்ஜா
  • Share this:
கன்னட நடிகரும், அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 39. பழம்பெரும் கன்னட நடிகரான சக்தி பிரசாத்தின் பேரன் இவர்.

நடிகை மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த சிரஞ்சீவி சார்ஜா, கடந்த 2028-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது மேக்னா ராஜ் கர்ப்பம் தரித்திருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்துள்ளார். அவரது மரணம் குடும்பத்தார் உள்ளிட்ட திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் செய்த டிக் டாக் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதில் எப்படிடா இவ்வளவு கஷ்டத்திலும் சிரிக்கிற என்று ஒரு குறல் கேட்க, அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற வசனம் பேசுகிறார் சிரஞ்சீவி சார்ஜா. புரியலையே என்ற வசனம் மீண்டும் ஒலிக்க, லைஃப் ஈஸ் வெரி ஷார்ட் நண்பா... ஆல்வேஸ் பீ ஹேப்பி என விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை பாடியிருக்கிறார். இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.


@chirrusarja♬ original sound - Pradeesமேலும் படிக்க: ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாடல்கள் எல்லாம் உங்க ப்ளே லிஸ்ட்ல இருக்கா?மேலும் படிக்க: சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச் சடங்கு: உடைந்து அழுத மேக்னா ராஜ்
First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading