Chiranjeevi: சிரஞ்சீவி படத்தில் மோகன் ராஜாவுக்கு கல்தா...?

சிரஞ்சீவியுடன் மோகன்லால்

லூசிபரின் தெலுங்கு ரீமேக்கில் தனது தந்தை சிரஞ்சீவியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய ராம் சரண், அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார்.

  • Share this:
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக இருந்தார் இயக்குநர் மோகன் ராஜா. ஆனால், அவரை படத்திலிருந்து மாற்ற தீர்மானித்திருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

    முரளி கோபி திரைக்கதையில், பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம், லூசிபர். மோகன்லாலின் அல்டிமேட் ஹீரோயிச படம். இயக்குனராக முதல் படத்திலேயே பிருத்விராஜ் முத்திரை பதித்தார். 150 கோடிகளை கடந்து படம் வசூலித்தது. தற்போது லூசிபரின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

    லூசிபரின் தெலுங்கு ரீமேக்கில் தனது தந்தை சிரஞ்சீவியை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய ராம் சரண், அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார். சிரஞ்சீவி தற்போது நடித்துவரும் ஆச்சார்யா முடிந்ததும் இந்த ரீமேக்கை தொடங்குவதாக திட்டம். சாஹோ இயக்குனர் சுஜீத், வி.வி.விநாயக் என பலரை முயன்று, இறுதியில் ரீமேக்கில் டாக்டரேட் வாங்கிய மோகன் ராஜாவை ஒப்பந்தம் செய்தனர். தெலுங்கு அரசியலுக்கு ஏற்ப சில மாற்றங்களை ராம் சரணும், சிரஞ்சீவியும் படத்தின் திரைக்கதையில் எதிர்பார்த்தனர்.

    ஆனால், மோகன் ராஜாவால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை, ஆகவே, அவரை மாற்ற முடிவு செய்துள்ளனர் என்கிறது தெலுங்கு திரையுலகம். லூசிபரை அப்படியே காட்சிக்கு காட்சி எடுத்தாலே படம் ஹிட்டாகும். மோகன் ராஜாவே அதற்கு சரியான சாய்ஸ் என்பவர்களும் இருக்கிறார்கள்.

    இன்னும் ஓரிரு தினங்களில் மோகன் ராஜா உள்ளேயா இல்லை வெளியேயா என்பது தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: