• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Hridayam: வாரிசுகள் இணையும் 'ஹிருதயம்’ படக்குழுவினருக்கு சிரஞ்சீவி வாழ்த்து!

Hridayam: வாரிசுகள் இணையும் 'ஹிருதயம்’ படக்குழுவினருக்கு சிரஞ்சீவி வாழ்த்து!

சிரஞ்சீவி - ஹிருதயம் குழு

சிரஞ்சீவி - ஹிருதயம் குழு

ஒரு படத்தின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர் என அனைவரும் வாரிசுகளாக இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹிருதயம் மலையாளப் படத்தில் அப்படியொரு காம்பினேஷன் அமைந்திருக்கிறது.

  • Share this:
    இந்தியாவில் சினிமா, அரசியல் இரண்டிலும் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். கேரள அரசியலில் வாரிசுகள் குறைவு. ஆனால், சினிமாவில் வாரிசுகள் தான் ஆட்சி செய்கின்றனர்.

    மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் மகன்கள் நாயகனாக நடிக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் பிருத்விராஜும், இந்திரஜித்தும் நடிகர் சுகுமாரனின் வரிசுகள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், ஒரு படத்தின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர் என அனைவரும் வாரிசுகளாக இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஹிருதயம் மலையாளப் படத்தில் அப்படியொரு காம்பினேஷன் அமைந்திருக்கிறது.

    நடிகர் மோகன்லாலும், ப்ரியதர்ஷனும் 40 வருட நண்பர்கள். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் மோகன்லால் நடித்துள்ளார், இப்போதும் நடிக்கிறார். இவர்களது பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை எழுதியவர், நடிகர், இயக்குநர், திரைக்கதையாசிரியர் சீனிவாசன். இந்த முக்கூட்டணியில் உருவான வெற்றிப் படங்கள் ஏராளம். கிளிச்சுண்டன் மாம்பழம், டி.பி.கோபாலன் எம்ஏ, போயிங் போயிங், முகுந்தேட்டா சுமித்ரா விளிக்குந்நு, ஆரம் ஆரம் கின்னாரம், அக்கரை அக்கரை அக்கரை.... என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் சீனிவாசனின் திரைக்கதையில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடித்தவை. பெரும்பாலான படங்களில் மோகன்லாலுடன் சீனிவாசன் நடிக்கவும் செய்திருந்தார். இந்த வெற்றிக் கூட்டணியின் வாரிசுகள்தான் ஹிருதயம் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

    மோகன்லாலின் மகன் பிரணவ் நாயகனாக அறிமுகமான ஆதி, அடுத்து நடித்த இருபத்தியோராம் நூற்றாண்டு இரண்டும் சுமாராகவே போனது. ஒரு வெற்றி அவசரமாக அவருக்கு தேவை. அவர் தான் ஹிருதயத்தின் நாயகன். நாயகி ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகள் கல்யாணி. எழுதி இயக்கியிருப்பது சீனிவாசனின் மூத்த மகனும் நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன்.

    வினீத் சீனிவாசன் இயக்கிய அனைத்துப் படங்களும் ஹிட். அதனால் இந்தப் படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும், நடிகர் சிரஞ்சீவி பிரணவ்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு மோகன்லால் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: