Home /News /entertainment /

தூத்துக்குடியில் பயிற்சி கலெக்டராக பிரபல நடிகரின் மகன் - குவியும் வாழ்த்துகள்!

தூத்துக்குடியில் பயிற்சி கலெக்டராக பிரபல நடிகரின் மகன் - குவியும் வாழ்த்துகள்!

ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ்

ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ்

2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    1980 மற்றும் 1990-களில் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சின்னி ஜெயந்த். ஹீரோவின் ஃப்ரெண்டாக பல முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த அவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு, தனது பெஸ்ட்டை கொடுத்து நியாயம் செய்தார். தற்போது விஜய் சேதுபதின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போது கிளவுட் நைனில் இருக்கிறார் சின்னி ஜெயந்த். ஆம் அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தில்  பயிற்சி ஆட்சியராக உள்ளார்.

    இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. முன்னதாக தான் பணியில் பொறுப்பேற்றதும் கல்வி, வணிகம், மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார் ஸ்ருதன்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி