ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Srutanjay Narayanan: திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக பிரபல நடிகரின் மகன்... குவியும் வாழ்த்துகள்!

Srutanjay Narayanan: திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக பிரபல நடிகரின் மகன்... குவியும் வாழ்த்துகள்!

ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ்

ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ்

பொதுவாக திரைப்பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் மக்களுக்கு சேவையாற்ற முன்வந்திருக்கும் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அவர்களில் இருந்து தனித்து மிளிர்கிறார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  1980 மற்றும் 1990-களில் பல தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சின்னி ஜெயந்த். ஹீரோவின் ஃப்ரெண்டாக பல முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த அவர், நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு, தனது பெஸ்ட்டை கொடுத்து நியாயம் செய்தார். சமீபத்தில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கிய ‘பேப்பர் ராக்கெட்’ வெப் சிரீஸில் நடித்திருந்த சின்னி ஜெயந்த், தற்போது விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடித்துள்ளார்.

  அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில், 75-வது ரேங்க் பெற்றார். மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார் செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய், கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ரஜினியின் ஜெயிலரை தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லரில் முக்கிய நடிகர்!

  இந்நிலையில் தற்போது அவர் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவரது அப்பா சின்னி ஜெயந்துக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பொதுவாக திரைப்பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் மக்களுக்கு சேவையாற்ற முன்வந்திருக்கும் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அவர்களில் இருந்து தனித்து மிளிர்கிறார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: IAS Transfer, Tamil Cinema