நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி

  • Share this:
நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளிவில் 75-வது இடம் பெற்றுள்ளார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. பிரதீப் சிங் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலைியில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் வாழ்க்கையில் என்னாவாக வேண்டுமென தனக்கு பெற்றோர் முழு சுதந்திரம் அளித்ததாக தெரிவித்தார். தமிழகத்தின் வலிமைகளான கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading