Charlie: தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு - கமிஷனரிடம் சார்லி புகார்!

சார்லி

ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளக் கணக்குகளை இதுவரை பயன்படுத்தும் அவசியம் வரவில்லை என்றார்.

  • Share this:
    தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு துவங்கியவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி திரைப்பட நடிகர் சார்லி, சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

    சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்த நடிகர் சார்லி, தனது பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு துவங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்தார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ட்விட்டர், முகநூல் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் தான் இதுவரை கணக்கு துவங்கவில்லை எனவும், தனது பெயரில் ட்விட்டரில் போலியான கணக்கு துவங்கப்பட்டுள்ளதாக நண்பர்கள் மூலம் அறிந்து சென்று பார்த்தபோது, பல்லாயிரக்கணக்கானோர் அந்த கணக்கை பின் தொடர்ந்து வாழ்த்தி வரவேற்றிருப்பது தெரிய வந்ததாகவும் கூறினார்.

    மேலும், கடந்த 40 ஆண்டு காலமாக தனது துறை மட்டுமல்லாது தனது அன்பிற்குரிய அனைவரும் தன்னுடன் நேரடித் தொடர்பில் தான் இருந்து வருவதாகக் கூறிய அவர், ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைதளக் கணக்குகளை இதுவரை பயன்படுத்தும் அவசியம் வரவில்லை என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து பேசிய அவர் தனது நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில் தன் பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்கை துவங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும், புகார் மீது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

    மேலும், தனது பெயரில் போலியான கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தனது ரசிகர்கள் உணர்ந்து அந்த கணக்கை பின்தொடர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சார்லி கேட்டுக்கொண்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: