Home /News /entertainment /

Bonda Mani: இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலை... உதவி கோரும் நடிகர் போண்டா மணி

Bonda Mani: இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலை... உதவி கோரும் நடிகர் போண்டா மணி

போண்டா மணி

போண்டா மணி

தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாமல் அரசு மருத்துவமனைக்கு வந்ததாகவும், அரசு மருத்துவமனையில் மிக சிறப்பாக கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினார் போண்டா மணி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நல குறைவு காரணமாக  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழக்கும் நிலையில் உள்ளன.

படப்பிடிப்பு ஒன்றின் போது, சாக்கடை நீரில் விழுந்ததாகவும் அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் போண்டா மணி தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, எனது சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து கூறினர். அதை கேட்டு மனம் உடைந்து போனேன் என்றார்.

தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாமல் அரசு மருத்துவமனைக்கு வந்ததாகவும், அரசு மருத்துவமனையில் மிக சிறப்பாக கவனித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறினார். அவருக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறங்கி எதாச்சும் செய்யலாமான்னு தோணுது... ப்ளூ சட்டை மாறன் மீதான கோபத்தை வெளிப்படுத்திய கெளதம் மேனன்

தனக்கு அனைவரும் உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நிதியுதவி தர வேண்டும் எனக் கோரவில்லை எனவும் ஆனால் கொடுத்தால் மறுக்கும் நிலையில் தான் இல்லை என்றும் தெரிவித்தார். நாளை அவரை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்திக்கவுள்ளார். நடிகர் போண்டா மணி, நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக்குடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி