’இந்தியன் 2' படத்தில் கமலுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா!

news18
Updated: August 11, 2019, 3:50 PM IST
’இந்தியன் 2' படத்தில் கமலுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா!
பாபி சிம்ஹா | இந்தியன் 2
news18
Updated: August 11, 2019, 3:50 PM IST
‘இந்தியன் 2’ படத்தில் நடிகர் பாபி சிம்ஹா வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1996-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படத்தின் 2-ம் பாகம் 22 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ளது. லைகா நிறுவனம் இந்தப் படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

கடந்த ஜனவரி 18-ம் தேதி பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில பிரச்னைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பிரச்னைகள் களையப்பட்டு ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு, பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க நடிகர் பாபி சிம்ஹாவை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அஜய் தேவ்கன், அக்‌ஷய்குமார் ஆகியோரது பெயர்களும் அடிபட்டன.

கமல்ஹாசன், காஜல் அகர்வாலைத் தொடர்ந்து படத்தில் புதிதாக இணைந்த அனைவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Loading...

வீடியோ பார்க்க: அஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...