ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நாளை வெளியாகிறது பரத்தின் லவ் பட டீசர்...!

நாளை வெளியாகிறது பரத்தின் லவ் பட டீசர்...!

லவ்

லவ்

மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பரத் நடித்துள்ள லவ் திரைப்படத்தை ஜனவரி மாதம் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக டீசரை நாளை மாலை வெளியிடுகின்றனர். 

பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகமாகி காதல் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பரத்.  இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை.  இதனால் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.  இந்த நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் வாணி போஜனுடன் பரத் நடித்த மிரள் திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் நல்ல த்ரில்லர் படம் என்று வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றி அடைந்த Love என்ற திரைப்படத்தை தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்து நடித்துள்ளார் பரத்.  இந்த திரைப்படத்திலும் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

Also read... பிகினியில் சொக்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா - இணையத்தை கலக்கும் போட்டோஸ்!

மலையாளத்தில் புலி முருகன், லூசிபர், குரூப், சல்யூட் ஆகிய படங்களுக்கு டயலாக் ரைட்டராக பணியாற்றிய ஆர்.பி பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் பிசியாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை வெளியிடுகின்றனர்.  இந்த படத்திற்கான பெரும்பாலான வேலைகள் முடிவடைந்ததால்,  ஜனவரி மாத இறுதியில் படத்தை திரைக்கு கொண்டுவர பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor bharath, Actress Vani Bhojan