நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத். திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது. விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
அஜித் பாடலுக்கு நடுரோட்டில் கயல் சீரியல் நடிகை சைத்ரா வெறித்தனமான ஆட்டம்!
லூசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.