Home /News /entertainment /

பரத் – வாணி போஜன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!!

பரத் – வாணி போஜன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!!

மிரள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மிரள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Actor Bharath : தமிழில் 8, லவ், முன்னறிவான் ஆகிய படங்களில் பரத் நடிக்கிறார்.

பரத் – வாணி போஜன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் பரத்திற்கு இந்த ஆண்டில் மட்டும் 5க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த குரூப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் இசாக் என்ற கேரக்டரில் பரத் நடித்திருப்பார். அதற்கு முன்பு தமிழில் வெளியான த்ரில்லர் திரைப்படமான காளிதாசும் நல்ல வரவேற்பை பெற்றது.

Happy Birthday R Madhavan: ஹேய் ஹேன்ட்சம்... நடிகர் மாதவனின் கிளிக்ஸ்!

இந்நிலையில் அடுத்ததாக பரத் நடிகை வாணி போஜனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மிரள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.



மிரள் படத்தில், கே.எஸ். ரவிக்குமார், மிரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் மிரள் படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா? 

பரத் தற்போது மலையாளத்தில் 6 ஹவர்ஸ், சமரா என்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

தமிழில் 8, லவ், முன்னறிவான் ஆகிய படங்களில் பரத் நடிக்கிறார். தெலுங்கில் சுதீர் பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கேரக்டரில் பரத் இடம்பெற்றுள்ளார்.
Published by:Musthak
First published:

Tags: Actor bharath, Actress Vani Bhojan

அடுத்த செய்தி