சல்மான் கானுக்கு வில்லனாகிறாரா பரத்...?

news18
Updated: November 9, 2019, 8:04 PM IST
சல்மான் கானுக்கு வில்லனாகிறாரா பரத்...?
சல்மான் கானுடன் நடிகர் பரத்
news18
Updated: November 9, 2019, 8:04 PM IST
நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் ராதே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பரத்.

இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத்.  அதற்கு பிறகு செல்லமே, காதல் ,பட்டியல் ,என் மகன்,வெயில்,பழனி,கண்டேன் காதலை, வானம் கடைசியாக பொட்டு என பல படங்களில் நடித்திருந்தார்.

தற்போது அவர் நடித்துள்ள காளிதாஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் இந்தப் படத்தில் முதல்முறையாக நடிகர் பரத் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.


இந்நிலையில் இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தில் நடிக்க பரத் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் பரத், சல்மான் கானுடன் நடிக்கும் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.Loading...First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...