சல்மான் கான் உடன் நடிக்கும் ‘ராதே’ படத்தின் அப்டேட் கொடுத்த பரத்

‘ராதே’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் உடன் நடிக்கும் ‘ராதே’ படத்தின் அப்டேட் கொடுத்த பரத்
சல்மான் கான் உடன் நடிகர் பரத்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 4:43 PM IST
  • Share this:
இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத். அதற்கு பிறகு செல்லமே, காதல், பட்டியல், எம் மகன், வெயில், பழனி, கண்டேன் காதலை, வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக பரத் நடிப்பில் ‘காளிதாஸ்’ வெளியானது. ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் இத்திரைப்படத்தில் அவர் முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் ‘ராதே’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பரத். மேலும் திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


கடந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாகவும் நடிகர் பரத் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். ‘ராதே’ படத்துக்கான பரத்தின் லுக்கை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் ஷாந்தனு.முன்னதாக சல்மான் கான் உடன் தான் நடிக்கும் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பதாக தெரிவித்திருந்த பரத், ‘ராதே’ தவிர்த்து ‘6 ஹவர்ஸ்’ உள்ளிட்ட இரண்டு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading