ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரச்னைகளை சரிசெய்து மீண்டும் மனைவியுடன் இணைந்த நடிகர்... ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

பிரச்னைகளை சரிசெய்து மீண்டும் மனைவியுடன் இணைந்த நடிகர்... ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

மனைவியுடன் பாலா

மனைவியுடன் பாலா

பாலா தனது மனைவி எலிசபெத்துடன் அந்தப் படத்தைப் பார்க்க சென்றதும், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மனைவியை பிரிந்ததாக சொல்லப்பட்ட நடிகர் சமீபத்தில் அவருடன் இணைந்து படம் பார்த்திருக்கிறார். இதனால் தங்கள் கருத்து வேறுபாடுகளை களைந்து, சமரசம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா, தமிழில் 'அன்பு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் மலையாள படங்களில் கதாநாயகனாக நடித்தார். தமிழில் இவர் அஜித் நடித்த 'வீரம்' படத்தில் கதாநாயகனின் தம்பியாக நடித்திருந்தார்.

2010-ல் அமிர்தா சுரேஷை திருமணம் செய்த பாலா, கருத்து வேறுபாடு காரணமாக 2016-ல் விவாகரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். பின்னர் அம்ரிதா மறுமணம் செய்து கொண்டார். பாலாவுக்கும், டாக்டர் எலிசபெத்துக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இதற்கிடையில் இவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் பிரச்னையால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இந்த விவாகரத்து வதந்திகள் மலையாள ஊடகங்களில் உலவ ஆரம்பித்தன.

ஒருவழியாக டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டை தெரிந்துக் கொண்ட பாரதி... விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!

இந்நிலையில், கடந்த வார இறுதியில் பாலா நடித்துள்ள 'ஷபீக்கின்டே சந்தோஷம்' மலையாளப் படம் வெளியாகியுள்ளது. பாலா தனது மனைவி எலிசபெத்துடன் அந்தப் படத்தைப் பார்க்க சென்றதும், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். பிரச்னைகளை களைந்து இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டதாக அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema