முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் பாலா ஐ.சி.யூ-வில் அனுமதி - மருத்துவமனைக்கு விரைந்த சிறுத்தை சிவா?!

நடிகர் பாலா ஐ.சி.யூ-வில் அனுமதி - மருத்துவமனைக்கு விரைந்த சிறுத்தை சிவா?!

பாலா

பாலா

பாலாவின் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிக்கை பின்னர் மருத்துவர்களால் வெளியிடப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல நடிகர் பாலா கல்லீரல் தொடர்பான பிரச்னை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து பாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சிகிச்சைக்காக ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆனதாகவும் கூறப்படுகிறது. பாலாவின் மனைவியின் உறவினர்கள் மற்றும் அவரது தாயார் தற்போது அவருடன் மருத்துவமனையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாலாவின் சகோதரரும் இயக்குனருமான சிவா, இன்று கொச்சிக்கு சென்று, தனது தம்பியை நலம் விசாரிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தயாரிப்பாளர்  பாதுஷா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாலாவைச் சந்தித்தனர். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மலையாள தயாரிப்பாளர் பாதுஷா, ”உன்னி முகுந்தன், நான், விஷ்ணு மோகன், ஸ்வராஜ் மற்றும் விபின் ஆகியோர் நடிகர் பாலாவை இன்று அமிர்தா மருத்துவமனையில் சந்தித்தோம்.

பாலா எல்லோரிடமும் நன்றாக பேசினார். தற்போது அவரது உடல்நிலையில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. அவரது சகோதரர் சிவா சென்னையில் இருந்து மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். பாலாவின் உடல்நிலை குறித்த அதிகாரபூர்வ அறிக்கை பின்னர் மருத்துவர்களால் வெளியிடப்படும்” எனக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பாலாவுக்கும் உன்னிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான பாலா, அன்பு என்ற தமிழ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். வீரம், தம்பி, அண்ணாத்த ஆகியவை அவர் நடித்த குறிப்பிடத்தகுந்த தமிழ் படங்கள். ஏராளமான மலையாளப் படங்களில் பாலா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Tamil Cinema