நீட் தேர்வு அச்சத்தால் செப்டம்பர் 12-ம் தேதி மட்டும் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார் சூர்யா. அதற்கு பாஜக தரப்பில் சில விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து பாபு கணேஷ் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “நீங்கள் செய்து கொண்டிருக்கிற ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் நான் மிகவும் ரசிக்கிறேன். ஒரு சில தவறுகள் செய்யும்போது சுட்டிக் காட்ட வேண்டியது எனது கடமையாக நினைக்கிறேன்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் மாநில செயலாளர் என்ற முறையில் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நீட் தேர்வு குறித்து பேசியிருக்கிறீர்கள். நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது நீதிபதிகளைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். முதலில் வழக்கறிஞராக எனது கண்டனத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவர்களாகியிருக்கிறார்கள். அதற்காக பிரதமரை பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இப்படி பேசியிருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
பாஜக மற்றும் பிரதமரின் திட்டத்தைக் குறி வைத்து அறிக்கை வெளியிடுகிறீர்கள். நல்ல தலைமைப் பண்பு மிக்கவர் நீங்கள். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் நீங்கள் பாஜகவில் இணைந்து உழைத்தால் நல்ல நிலைக்கு வர முடியும். பாஜகவில் இணைந்தால் நீங்கள் நிறைய சாதிக்கலாம்.
பாஜகவின் குறைகளைச் சுட்டிக் காட்டும் நீங்கள் பிரதமர் செய்த நல்ல விஷயங்களை பாராட்டி ஒரு வீடியோ வெளியிட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து’ இவ்வாறு பாபு கணேஷ் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.