இயக்குநரான நடிகர் அட்டகத்தி தினேஷ்... அவரே வெளியிட்ட போஸ்டர்

நடிகர் தினேஷ்

நடிகர் அட்டகத்தி தினேஷ் இயக்குநராக அவதாரமெடுத்திருக்கிறார்.

 • Share this:
  பா.ரஞ்சித் இயக்கத்தி 2012-ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர் தினேஷ். தொடர்ந்து குக்கூ, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு வெற்றிமாறனின் விசாரணை திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் ஒருநாள் கூத்து திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

  அட்டகத்தி திரைப்படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கிய கபாலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த தினேஷ், பா.ரஞ்சித் தயாரித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்திலும் ஹீரோவாக நடித்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

  நாயகனாக நடித்து வந்த தினேஷ் தற்போது வயிறுடா என்ற படத்தை இயக்கி வருவதாக தெரிகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வயிறுடா படத்தின் போஸ்டர்களை தினேஷ் பதிவிட்டுள்ளார். அதில் அவரே நடித்து இயக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.   
  View this post on Instagram

   

  A post shared by Dinesh (@vrdinesh27)


  திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு முன்னர் ஈ, எவனோ ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தினேஷ் சின்னத்திரையில் பெண், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: