• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று

நடிகர் அதர்வா

நடிகர் அதர்வா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நடிகர் அதர்வா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்தியா முழுவதும் கொரொனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக நேற்று 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 27 வயது இளைஞர் உள்பட 39 பேர் நேற்று ஒருநாளில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் தொற்று பரவல் அதிகரித்தால் அடுத்த ஒரு சில நாட்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய பாதிப்பு பதிவாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

வீடு தோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை 2.10 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 80,728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 9,344 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் சனிக்கிழமை ஒருநாள் பாதிப்பு 2,884 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திரைப்பட நடிகர்கள் பலரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அதர்வா, தனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாம் ஆண்டன் இயக்கி வரும் புதிய ஆக்‌ஷன் படத்தில் அதர்வா நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சந்திரங்களும் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: