துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த அதர்வா!

துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த அதர்வா!
நடிகர் அதர்வா
  • News18
  • Last Updated: January 14, 2020, 4:13 PM IST
  • Share this:
மழை வெள்ளம் காரணமாக நடிகர் அதர்வா துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளார்.

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், அமிதாஸ் பிரதான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யா அருகே அஜர்பைஜானில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது. இந்நிலையில் அங்கு செல்வதற்காக கடந்த சனிக்கிழமை துபாய் சென்ற அதர்வா அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக விமான நிலையத்திலேயே சிக்கி தவித்துள்ளார்.




துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான சேவை தடைபட்ட நிலையில் நடிகர் அதர்வா 24 மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கேயே காத்திருந்தார். விமான நிலையத்தின் ஓடு பாதைகளை சரிசெய்யப்பட்ட பின்னர் அங்கிருந்து கிளம்பிய அதர்வா திங்கள் கிழமை மதியம் அஜர்பைஜான் சென்றுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 28-ம் தேதி வரை அஜர்பைஜானில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தர்பார் படத்தின் 4 நாள் வசூல் - லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading