Atharvaa: கொரோனாவிலிருந்து மீண்ட அதர்வா - உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அதர்வா

இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

  • Share this:
    கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டதாக நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும், மற்றவர்கள் வீட்டில் தனித்திருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை புரட்டிப் போட்டுள்ளது. எங்கும் பாதிப்புகள், மரணங்கள். திரைநட்சத்திரங்கள் கணிசமானவர்கள் பெருந்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நடிகர் அதர்வாவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டார். சில வார தனிமைப்படுத்துதலுக்குப் பின் அவர் மீண்டும் கொரோனா டெஸ்ட் எடுத்தார். அதில் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. தற்போது கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளார்.

    "கோவிட் பரிசோதனையில் எனக்கு நெகட்டிவ் வந்துள்ளது. உங்களின் அன்புக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன். கவனமாக இருங்கள், வீட்டில் இருங்கள்" என்று அதர்வா கூறியுள்ளார்.



    அதர்வா தற்போது இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே படத்தை முடித்துள்ளார். அதனுடன் 8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றால் அந்தப் படத்தின் வேலைகள் தடைபட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: