Home /News /entertainment /

அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்… ஆகஸ்ட் 5-ல் திரைக்கு வருகிறது

அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்… ஆகஸ்ட் 5-ல் திரைக்கு வருகிறது

குருதி ஆட்டம் போஸ்டர்

குருதி ஆட்டம் போஸ்டர்

Kuruthi Aattam Trailer : 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் குருதி ஆட்டம் படத்தை இயக்கி இருக்கிறார். ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வாரம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார், வத்சன் சக்கரவர்த்தி, வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

    8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் குருதி ஆட்டம் படத்தை இயக்கி இருக்கிறார். ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    Gulu Gulu: சந்தானத்தின் குலு குலு திரைப்படம் - விமர்சனம்

    கடந்த சில ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், குருதி ஆட்டம் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரும் ஆகஸ்ட்5ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் விருப்பங்களை பற்றி வருகிறது. ஆக்சன் நிறைந்த காட்சிகளாக ட்ரெய்லர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ட்ரெய்லரைப் பார்க்க...



    கடந்த சில ஆண்டுகளாக நடிகர் அதர்வாவுக்கு படங்கள் சிறப்பாக அமையாத நிலையில், அந்த குறையை குருதி ஆட்டம் திரைப்படம் போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது அட்ரஸ், ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த, நிறங்கள் 3 உள்ளிட்ட படங்களில் அதர்வா நடித்து வருகிறார். 8 தோட்டாக்கள் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தின் இயக்குனர் இயக்கி இருப்பதால் குருதி ஆட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

    செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கமல் ஹாசன் குரலில் தமிழ்நாட்டு வரலாறு!

    முன்னதாக இந்த படத்தில் இருந்து வெளியிடப்பட்ட ரொமான்டிக் பாடல் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Atharvaa

    அடுத்த செய்தி