ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அதர்வா ராஜ்கிரண் 'பட்டத்து அரசன்' படத்தின் பர்ஸ்ட் லுக்..

அதர்வா ராஜ்கிரண் 'பட்டத்து அரசன்' படத்தின் பர்ஸ்ட் லுக்..

பட்டத்து அரசன்

பட்டத்து அரசன்

இயக்குனரின் முந்தைய திரைப்படங்கள் போல இந்த படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதர்வா நடிக்கும் திரைப்படத்திற்கு பட்டத்து அரசன் என தலைப்பு வைத்துள்ளனர்.

களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் தற்போது அதர்வா நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன. இதில் அதர்வாவுடன் ராஜ்கிரன், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனரின் முந்தைய திரைப்படங்கள் போல இந்த படமும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் வகையிலும் காட்சிகள் இடம் பெறும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த படத்தின் தலைப்பு பட்டத்து அரசன் என தகவல் வெளியானாலும் அதை பட குழுவினர் உறுதிப்படுத்தாமல் இருந்தனர்.

வாரிசு படத்துக்கு தியேட்டர் சிக்கலா? துணிவு விநியோகஸ்தர் உதயநிதி சொன்னது இதுதான்!

இந்த நிலையில் தற்போது பட்டத்து அரசன் என்ற தலைப்பையும் படத்தின் முதல் பார்வையையும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் லைகா வெளியிட்டுள்ளது. மேலும் படம் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளது.

தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த சிம்பு!

இந்த திரைப்படத்திற்கு துணிவு திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by:Srilekha A
First published:

Tags: Actor Atharvaa