விஜய் பட பாடலுக்கு ட்ரெட்மில்லில் ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்திய நடிகர்

உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் நடிகர் அஸ்வின் குமார்.

விஜய் பட பாடலுக்கு ட்ரெட்மில்லில் ஸ்டைலாக டான்ஸ் ஆடி அசத்திய நடிகர்
நடிகர் அஸ்வின் குமார்
  • Share this:
எனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் அஸ்வின் குமார் உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தி வருகிறார்.

இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டார்.

அந்த வீடியோவைப் பார்த்த கமல்ஹாசன், “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை” என்று அஸ்வினை பாராட்டினார்.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.படிக்க: விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்

மேலும் அஸ்வின் தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஸ்வின் குமார் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதால் அவருக்கு கமல்ஹாசன் மற்றும் விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading