முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தேஜாவு பட இயக்குநருடன் இணையும் நடிகர் அஸ்வின்!

தேஜாவு பட இயக்குநருடன் இணையும் நடிகர் அஸ்வின்!

இயக்குநர் அரவிந்த் சீனிவாசன், நடிகர் அஸ்வின்

இயக்குநர் அரவிந்த் சீனிவாசன், நடிகர் அஸ்வின்

'தேஜாவு' பட இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிகர் அஸ்வின் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் அஸ்வின். அடிப்படையில் மாடலான இவர், அந்நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வையாளர்களிடம் பரிச்சயமானார்.

அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, குட்டி பட்டாஸ், அடிப்பொலி உள்ளிட்ட சில ஆல்பம் பாடல்களில் நடித்தார் அஸ்வின். இதனை தொடர்ந்து இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் என்ன சொல்லப் போகிறாய் படத்தில் நடித்தார். படம் தோல்வியை தழுவியது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கு முன் 40 கதையைக் கேட்டுத் தூங்கியதாக அஸ்வின் பேசியிருந்தார். அவர் பேசிய தொனி, சமூக வலைதளங்களில் பெரிதாக ட்ரோல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ படத்தில் அஸ்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பல பாசிட்டிவ் விமர்சனங்களையும் நடிகர் அஸ்வின் பெற்றார்.

இந்நிலையில், அருள்நிதி நடிப்பில் வெளியான 'தேஜாவு' பட இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிகர் அஸ்வின் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ரொமான்டிக், த்ரில்லர் ஜேனரில் தயாராகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Entertainment