ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யா- கார்த்தி சகோதரர்கள் வெளியிட்ட நித்தம் ஒரு வானம் ட்ரைலர்

சூர்யா- கார்த்தி சகோதரர்கள் வெளியிட்ட நித்தம் ஒரு வானம் ட்ரைலர்

நித்தம் ஒரு வானம்

நித்தம் ஒரு வானம்

நித்தம் ஒரு வானம் படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'நித்தம் ஒரு வானம்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி வெளியிட்டார்.

  இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன், தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, ஓ மை கடவுளே ஆகியப் படங்களில் கவனம் பெற்றார். தற்போது நித்தம் ஒரு வானம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெயின்மெண்ட், வயாகாம் 18 இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார்.

  இதில் அசோக் செல்வன் உடன் ரித்துவர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா இப்படத்திற்கு படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

  சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படம் குறித்துப் பேசிய அசோக் செல்வன், “நான் காதல் கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்து விட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன்.

  ட்ரெய்லரைப் பார்க்க...

  ' isDesktop="true" id="826752" youtubeid="JFwe0lgPDqA" category="cinema">

  இந்நிலையில் ’நித்தம் ஒரு வானம்’ கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் மற்றும் எனக்கு வித்தியாசமான 3 தோற்றங்கள் உள்ளன. எனக்கு கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடிக்க ஆர்வம் இருந்தது.

  Read More: துணிவு VS வாரிசு... 8 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் மோதும் அஜித்- விஜய் படங்கள்

  அது இந்த படத்தில் நிறைவேறி உள்ளது. எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால் தான் நடிப்பேன் என்று இயக்குனரை நான் நிர்ப்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2-ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actor Karthi, Actor Suriya, Tamil Cinema