அசோக் செல்வனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் குறித்த தகவலை கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அசோக் செல்வனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
அசோக் செல்வன்| நிஹாரிகா
  • Share this:
அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது.

இந்தப் படத்தை அடுத்து தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் அசோக் செல்வன் நடித்து வருகிறார். அனி சசி இயக்கும் இந்தப் படத்தில் நித்யா மேனன் ரீத்து வர்மா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 7-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட பூஜை எளிமையாக நடைபெற்றதாகவும் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார்.



லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏ.ஆர். சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் வேதா எடிட்டர் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கொரோனா பிரச்னை முடிந்தவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: வலிமை ஷூட்டிங் - தனது தீர்க்கமான முடிவை போனி கபூரிடம் தெரிவித்த அஜித்








First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading