8 வருட தவம்... ஆர்யாவின் மகாமுனி டீசர் அறிவிப்பு

Web Desk | news18
Updated: May 16, 2019, 5:12 PM IST
8 வருட தவம்... ஆர்யாவின் மகாமுனி டீசர் அறிவிப்பு
மகாமுனி
Web Desk | news18
Updated: May 16, 2019, 5:12 PM IST
‘மகாமுனி’ படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆர்யா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான படம் கஜினிகாந்த். இந்தப் படத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யா - சாயிஷா திருமணம் நடைபெற்றது. இதனிடையே இருவரும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டெடி’ படத்திலும், சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ படத்திலும் ஆர்யா நடித்து வந்தார். இந்த இரண்டு படங்களையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மகாமுனி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்யா கடந்த ஏப்ரல்மாத இறுதியில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ஆர்யா.



இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



‘மௌன குரு’ படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் மகாமுனி கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மௌன குரு’ படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பின் தனது இரண்டாவது படமாக மகாமுனி படத்தை சாந்த குமார் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: தீவிர அரசியலில் இறங்கிவிட்டோம்... தீவிரமாகத்தான் பேசுவோம் - கமல்

First published: May 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626