முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘கேப்டன் ஷூட்டிங்கின்போது 2 முறை கொலை செய்யப் பார்த்தார்’ – இயக்குனரை கலாய்த்த நடிகர் ஆர்யா

‘கேப்டன் ஷூட்டிங்கின்போது 2 முறை கொலை செய்யப் பார்த்தார்’ – இயக்குனரை கலாய்த்த நடிகர் ஆர்யா

ஆர்யா - ஐஸ்வர்ய லெட்சுமி

ஆர்யா - ஐஸ்வர்ய லெட்சுமி

Captain Movie : கேப்டன் போன்ற திரைப்படத்தை இந்த அளவுக்கு குறைந்த பட்ஜெட்டில் யாரும் உருவாக்கியது இல்லை. – இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கேப்டன் படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் தன்னை 2 முறை கொல்லப் பார்த்ததாக, நடிகர் ஆர்யா விளையாட்டாக பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் வரும் 8-ம் தேதி வெளியாகிறது.  இந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.  அதில் பேசிய ஆர்யா கேப்டன் என்ற தலைப்பை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரிடமிருந்து பெற்றதாக கூறினார்.  சக்தியின் சவுந்தர்ராஜன் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த திரைப்படத்தில் நடித்தேன் என ஆர்யா கூறினார்.

கலவை விமர்சனங்களைப் பெறும் விஜய் தேவரகொண்டாவின் லைகர்…

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இரண்டு முறை இயக்குனர் தன்னை கொல்ல பார்த்தார் என விளையாட்டாக பேசினார். அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் கஷ்டப்பட்டு நடித்ததாகவும் ஆர்யா தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய சக்தி சௌந்தர்ராஜன், கேப்டன் போன்ற திரைப்படத்தை  இந்த அளவுக்கு குறைந்த பட்ஜெட்டில் யாரும் உருவாக்கியது இல்லை.  இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Cobra: நான் ஒரு சாதாரண மேத்ஸ் வாத்தியார்... விக்ரமின் கோப்ரா ட்ரைலர் வெளியீடு!

top videos

    கேப்டன் படத்தின் இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில்,  டெடி படத்திற்குப் பிறகு மீண்டும் ஆர்யா மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் உடன் பணியாற்றுகிறேன்.  ஆர்யாவை இயக்குனர் சிறந்த முறையில் வேலை வாங்கியுள்ளார். அதற்கான பலன் திரையில் தெரிகிறது என கூறினார்.

    First published:

    Tags: Actor Arya