சிம்புவை அடித்து துவம்சம் செய்யத் தயாராகும் ஆர்யா?

சிம்புவை அடித்து துவம்சம் செய்யத் தயாராகும் ஆர்யா?
சிம்பு | ஆர்யா
  • Share this:
சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இந்தப் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாகவும், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது.


நடிகர் ஆர்யா தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச் சண்டையை மையப்படுத்திய சல்பேட்டா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்காக அவர் தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியிருக்கும் நிலையில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் அறிவிப்பு வெளியானால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

மேலும் படிக்க: ‘தல வீட்டில இருக்காரு... நீங்களும் இருங்க’ - திமுக எம்.எல்.ஏ வேண்டுகோள்!


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்