ரஞ்சித்தின் வழக்கமான அடையாள அரசியல் இருக்காது - சார்பட்டா பரம்பரை குறித்து ஆர்யா ஓபன் டாக்

சார்பட்டா பரம்பரை

ரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸை தொடர்ந்து வட சென்னையை அடிப்படையாகக் கொண்டப் படம் சார்பட்டா பரம்பரை.

 • Share this:
  கபாலி, காலா படங்களுக்குப் பிறகு ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த இரு குத்துச் சண்டை அணிகளைப் பற்றிய திரைப்படம் இது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் வழிவழியாக குத்துச் சண்டையில் போட்டியிடுகின்றன. இதன் பின்னணில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

  ரஞ்சித்தின் அட்டக்கத்தி, மெட்ராஸை தொடர்ந்து வட சென்னையை அடிப்படையாகக் கொண்டப் படம் என்பதால், சார்பட்டா பரம்பரை படத்தை ரசிகர்கள், திரைத்துறையினர் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

  இதில் ஆர்யா பாக்ஸிங் வீரராக நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் பசுபதி, அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன். ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கே9 ஸ்டுடியோஸ் சார்பட்டா பரம்பரை படத்தை தயாரித்திருக்கிறது.

  இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் குறித்து நடிகர் ஆர்யா நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு பேட்டியளித்தார். அதில், வழக்கமாக ரஞ்சித் படத்தில்  சமூக சிந்தனை, இன ரீதியான கருத்துகள் அதிகம் இருக்கும். ஆனால் இந்த படத்தில்  ரஞ்சித்தின் வழக்கமான அடையாள அரசியல் இருக்காது. படத்தில் குத்து சண்டை வீரர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மட்டுமே முக்கிய கதையாக இருக்கும் என்றார்.  மேலும் திரையுலகில் அவரது அனுபவங்கள் குறித்து நடிகர் ஆர்யா பகிர்ந்து கொண்டார். ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் சார்பட்டா பரம்பரை  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: