ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆர்யாவின் கேப்டன் படம் குறித்த புதிய அப்டேட்!

ஆர்யாவின் கேப்டன் படம் குறித்த புதிய அப்டேட்!

அடுத்த மாதம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு புரமோஷனை ஆரம்பிக்க இருக்கிறார்கள். கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் கேப்டன் படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என படத்துக்குப் படம் வித்தியாசமான களத்தை தேர்வு செய்து அதில் வெற்றி பெறுகிறவர் சக்தி சௌந்தர்ராஜன். விமர்சகர்கள் படம் சுமார் என்று கூறினாலும் சக்தி சௌந்தர்ராஜனின் படங்கள் போட்ட பணத்துக்கு மேல் லாபம் சம்பாதிக்கும். அவரது புதிய படம் தான் கேப்டன்.

சார்பட்டா பரம்பரை என்ற பம்பர் ஹிட்டுக்குப் பின் ஆர்யா இந்த கேப்டன் படத்தில்தான் நடித்து வருகிறார். அவரது தி ஷோ பீப்பிள், திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து கேப்டனை தயாரிக்கின்றன. இதில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க, கன்னட நடிகை காவ்யா ஷெட்டியும், சிம்ரனும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் போன்றவர்களும் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க.. கடைசியில் இதுதான் உங்க ட்விஸ்டா? கையெடுத்து கும்பிட்ட கண்ணம்மா!

சக்தி சௌந்தர்ராஜன் இந்தமுறை சயின்ஸ் பிக்ஷனை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார். யுவா ஒளிப்பதிவில், டி.இமானின் இசையில் கேப்டன் வளர்ந்து வருகிறது. இன்னும் பத்து தினங்கள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்த படப்பிடிப்பில் நிறைவுபெறும் என்கிறது படக்குழு.

இதையும் படிங்க.. கோபிக்கும் பாக்கியாவுக்கும் விவாகரத்து? பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கட்டம்!

அடுத்த மாதம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு புரமோஷனை ஆரம்பிக்க இருக்கிறார்கள். கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sreeja
First published:

Tags: Actor Arya, Kollywood