முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆர்யா நடிப்பில் வெளிவந்த கேப்டன் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் அறிவிப்பு…

ஆர்யா நடிப்பில் வெளிவந்த கேப்டன் படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் அறிவிப்பு…

கேப்டன் படத்தின் போஸ்டர்.

கேப்டன் படத்தின் போஸ்டர்.

சக்தி செளந்தர்ராஜன் தன்னுடைய படங்களில் ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் ஏதேனும் ஒரு விஷயத்தை கையில் எடுத்துகொண்டு படமாக்குவார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆர்யா நடிப்பில் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

டெடி திரைப்படத்திற்கு பிறகு சக்தி செளந்தர்ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவான படம் கேப்டன். இந்தப் படத்தில் ஆர்யாவுடன்  சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். டி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தியாவின் வடக்கிழக்கு பகுதியில் மூன்று நாடுகள் எல்லையில் இருக்கும் காட்டுப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை.

அந்த பகுதிக்கு செல்லும் ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள். அங்கு என்ன நடந்தது? வீரர்களை யார் கொன்றார்கள் என்று ராணுவத்திற்கு தெரியவில்லை. இந்த நிலையில் அந்தப் பகுதிக்கு ஆர்யா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு செல்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கேப்டன் படத்தின் கதை.

போனி கபூருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் ரசிகர்கள்… செய்த சம்பவம் இதுதான்…

சக்தி செளந்தர்ராஜன் தன்னுடைய படங்களில் ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் ஏதேனும் ஒரு விஷயத்தை கையில் எடுத்துகொண்டு படமாக்குவார். அந்த வகையில் இந்த முறை Creature-ஐ கையில் எடுத்திருந்தார். அந்த உயிரினம் தன்னுடைய பகுதிக்குள் வருபர்களை கொல்கிறது? ஆனால் ஆர்யாவை மட்டும் அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை பயன்படுத்தி Creature-ஐ அழித்தாரா இல்லையா என்பது படத்தின் முடிவு.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் பலவீனமான திரைக்கதை, ஓகே ரகமான கிராஃபிக்ஸ் காட்சிகளால் ரசிகர்களை அதிகம் ஈர்க்கவில்லை.

top videos

    இந்நிலையில் கேப்டன் படம் வரும் 30ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Actor Arya